தூத்துக்குடி திருநெல்வேலி பைபாஸ் ரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தின் வழியாக செல்லும் மாற்றுத்திறனாளி அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையானது பல ஆண்டுகளாக கரடுமுரடான பாதையாக, சீர் செய்யப்படாமல் இருந்தது.

கரடுமுரடான பாதையை சீர் செய்து புதிய தார் சாலை வசதிகள் ஏற்படுத்தி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படும் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு காண இந்து முன்னணி சார்பில் அமைச்சர், ஆட்சியர் மற்றும் மேயருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த முன்னணியின் கோரிக்கையை ஏற்று கரடுமுரடான சாலையை சீர் செய்து புதிய தார் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆகியோருக்கு இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.