தூத்துக்குடி மாநகராட்சி 9வது வார்டு பூபாலராயர்புரம் 5வது தெரு மேற்கு பகுதியில், கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால் சிறிய மழை பெய்தாலே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளானனர்.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் வீடுகளில் துர்நாற்றம் வீசியது. இதனால் குடியிருப்போர் கடும் அவதிய கொண்டனர். இந்நிலையில், இப்பிரச்சனை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான மாண்புமிகு கீதா ஜீவன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அமைச்சர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மழைநீரை வெளியேற்றவும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யவும் விரைவான உத்தரவு பிறப்பித்தார். அமைச்சரின் உத்தரவின் பேரில் இரவு பகல் பாராது பணிகள் தொடங்கப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும், அமைச்சர் கீதா ஜீவன் நேரில் அப்பகுதிக்கு சென்று பணிகளை ஆய்வு செய்து, எந்த வித தொய்வும் இல்லாமல் பணிகள் விரைவில் நிறைவு பெற அதிகாரிகளுக்கு நேர்முக அறிவுறுத்தல்கள் வழங்கினார். அருகிலுள்ள பூபாலராயர்புரம் 2வது தெருவிலும் இதேபோன்ற பிரச்சனை இருந்தது. அங்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, இப்போது 5வது தெருவிலும் அதே துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்பகுதி மக்கள் தங்களின் நீண்டநாள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்ததை வரவேற்று, "எங்கள் பிரச்சனையை உடனே கவனித்து தீர்வு அளித்த அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!" என தெரிவித்தனர்.
தூத்துக்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு மின்னல் வேகத்தில் பதிலளிக்கும் செயற்பாட்டு ஆளுமையாக அமைச்சர் கீதா ஜீவன் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.
தூத்துக்குடி
மழைநீர் பிரச்சனைக்கு மின்னல் வேக தீர்வு — அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி நடவடிக்கை!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா யாக வழிபாடு: அன்பும் அமைதியும் நிலவ பிரார்த்தனை – “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்!!
அடுத்த
மழைக்கால முன்னெச்சரிக்கையில் தீவிரம் — ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026