இயற்கை என்பது நமக்கு இறைவன் அளித்த கொடை. அது நமக்கு உணவு, உடை, உறைவிடம் என அனைத்தையும் தருகிறது. நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு அனைத்தும் இயற்கையின் கொடையே.

இயற்கை அன்னை நமக்குத் தரும் இந்தப் பரிசுகளை நாம் போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாகும். இயற்கையின் அழகு நம்மை எப்போதும் பிரமிக்க வைக்கிறது. மலைகள், காடுகள், ஆறுகள், கடல்கள் என இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் ரம்மியமாக காட்சி தருகிறது.

இந்த இயற்கையை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இன்றைய காலகட்டத்தில், தொழிற்சாலைகள் பெருகி வருவதால், இயற்கை அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் ஆறுகளில் கலப்பதால், நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை மூட்டத்தால், காற்று மாசுபடுகிறது. இதனால், மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நாம் இயற்கையைப் பாதுகாக்க சில எளிய வழிகளை பின்பற்றலாம்.

உதாரணத்திற்கு, மரங்களை நடுவது, நீர்நிலைகளை பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது போன்ற செயல்களை செய்யலாம். மேலும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் முடியும்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை அனைத்தும் இயற்கை நமக்கு தந்த கொடை இவைகளால் ஆனது தான் இந்த பூமி இவைகளை நேசிப்போம். இதனால் இயற்க்கையான சுத்தமான காற்றை சுவாசிப்போம்.

"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே" என்ற வரிகளுக்கு ஏற்ப "இயற்க்கையை நேசி சுத்தமான காற்றை சுவாசி" என்றும்,

"இயற்கையை நேசிப்போம், இயற்கையை பாதுகாப்போம்" என்ற எண்ணத்துடன் நாம் அனைவரும் இயற்கை அன்னையை போற்றிப் பாதுகாப்போம். என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.