சென்னையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஷி ஆனந்த் முன்னிலை வகித்தார்.
தேர்தல் பரப்புரை செயலாளர் ஆதவ் அர்ச்சனா, கொள்கை பரப்பு செயலாளர் நிகில், மற்றும் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர், மண்டல செயலாளர்கள் வருகை தந்தார்கள். அதோடு காவல்துறையின் பாதிப்பால் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்தினரும் வந்திருந்தார்கள்.
குறிப்பாக மடப்புரம் கோவில் காவலாளி தம்பி அஜித்குமார் காவல் விசாரணையின் போது மரணமடைந்ததற்கு உரிய நீதிகேட்டும் அதுபோன்று தமிழ்நாட்டில் 24 பேர் லாக்கப் டெத்தில் இறந்து இருக்கிறார்கள். என்றும் அவர்களுக்கும் சமமான நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோஷங்கள் முழக்கங்கள் எழுப்பபட்டது.
பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்தக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டப் பொறுப்பாளர் பாலா தலைமையில், மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர் சம்பத்குமார், மாவட்ட துணைச் செயலாளர் எபநேசர், மாவட்ட நிர்வாகிகள் செல்வின், அண்ணலட்சுமி, மற்றும் விஜயகுமார், புதூர் ஒன்றிய நிர்வாகிகள் செண்பகக்கனி, காசிராம், கபாலீஸ்வரன் உள்ளிட்ட தூத்துக்குடி தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
