இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் எட்டையபுரம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் தா. அரசுரஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவேந்திரா, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயச்சந்திரன், மாரி காளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவசுப்பையா மற்றும் நிர்வாகிகள் வரும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் குறித்து கலந்தாலோசனை செய்தார்கள்.

மற்றும் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் வடக்கு  மாவட்ட பகுதியில் 1500 விநாயகர் சிலைகள் பிரேதிஷ்டை செய்யது. விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக நடத்துவது  சம்பந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.