குமரித் தந்தை என்று எல்லோராலும் அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் 57 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மார்ஷல் நேசமணி படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்க மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.