தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை வைத்து ஜேசிபி உரிமையாளர்கள் தொழில் செய்து வருகின்றனர்.

இதன் மூலம் சுமார் 500 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜேசிபி இயந்திரம் விலை உயர்வு மற்றும் டீசல், ஆயில், இன்சூரன்ஸ், சாலை வரி, வாகன உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக குறைந்த வாடகைக்கு ஜேசிபி இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து முத்தையாபுரம் பகுதி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் மே 1 முதல் ஜேசிபி இயந்திரங்கள் இயக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1200 குறைந்தபட்ச வாடகையாக  ரூ.3500 மாத வாடகையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் என வாடகையை நிர்ணயம் செய்து இன்று (30.04.2025) தங்களது ஜேசிபிகளை எந்த பணிக்கும் அனுப்பாமல் நிறுத்தி வைத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.