தூத்துக்குடியில் தவெக கொள்கை தலைவரும், மக்கள் சேவகரும், தென்னகத்து ஜான்சிராணி " அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் உத்தரவின்படி, கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இந்த மண்ணை நேசித்த, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான, மக்கள் சேவகர் "அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.டி.ஆர் சாமுவேல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கோல்டன்,
கிஷோர், அண்டோ, சிவகுமார்,
சதீஷ்குமார், மகேஷ், விஜய் சுபாகர், முருகன், ஜெனோஜ், மூர்த்தி, விஜய்கார்த்திக், சீமான், வசந்த், அசோக், ஆகாஷ், திலகா, ஜூடி, காயத்திரி, சித்ரா, ரெஜினா, மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, வார்டு, மற்றும் சார்பு அணியை சேர்ந்த கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.