தூத்துக்குடியில் என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் போல் பேட்டை நினைவிடத்தில் அனுசரிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ், ஆகியோர் தலைமையில் நினைவிடத்தில் அமைந்துள்ள மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, கலை இலக்கிய அணி மாநில துணை செயலாளர் மகாராஜன், மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ், உட்பட மதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு என். பெரியசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.