தூத்துக்குடி–நாசரேத் திருமண்டல டயோசிசன் நிர்வாகத் தேர்தல், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 13ம் தேதி, திருமண்டலத்தில் உள்ள 6 சபை மன்றங்களிலும் நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பிரதிநிதிகள் சார்பிலான பெருமன்ற உறுப்பினர்கள் தேர்வு, சபை மன்ற செயலாளர்கள், ஆரம்ப கல்வி நிலவரக் குழு, குருத்துவ நிலவரக் குழு, சமூக நலத்துறை குழு உள்ளிட்ட பல்வேறு உபக்குழுக்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.
தேர்தலில் முன்னாள் லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் தலைமையிலான அணியும், டி.எஸ்.எப். கிப்ட்சன் தலைமையிலான அணியும் நேரடியாக மோதின. கடந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணியில் இருந்த மோகன்ராஜ் அருமைநாயகம், ஜான்சன் டேவிட் உள்ளிட்டோர் இந்த முறை எஸ்.டி.கே. ராஜன் அணியில் இணைந்து செயல்பட்டனர். இதனால் தேர்தல் கடும் போட்டியுடன் பரபரப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில் நடைபெற்ற கவுன்சில் தேர்தலில், 6 சபை மன்றங்களிலும் உள்ள 24 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பதவிகளையும் எஸ்.டி.கே. ராஜன் தலைமையிலான அணி கைப்பற்றி, 100 சதவீத வெற்றியை பதிவு செய்தது.
சபை மன்ற வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் :
நாசரேத் கனோன் ஆர்தர் மார்காஷிஸ் சபை மன்றம் செயற்குழு உறுப்பினர்கள் – மாமல்லன், ஸ்டீபன் சாலமோன், பியூலா ரத்தினம், மோசஸ் ராஜகுமார் சபை மன்ற செயலாளர் – கோயில்ராஜ்
கோவில்பட்டி இராக்லாண்ட் சபை மன்றம் செயற்குழு உறுப்பினர்கள் – ஜான்சிங், தனராஜ், அபிநயா, சுபா சபை மன்ற செயலாளர் கிருபைராஜ்
தூத்துக்குடி பேராயர் ராபர்ட் கால்டுவெல் சபை மன்றம் செயற்குழு உறுப்பினர்கள் –முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், ஜெபச்சந்திரன், செலினா, ஜானியேல் சாலமோன் மணிராஜ் சபை மன்ற செயலாளர் ராபர்ட்ரவிசிங் பெஞ்சமின்
சாயர்புரம் டாக்டர் ஜி.யு. போப் சபை மன்றம் செயற்குழு உறுப்பினர்கள் – அருள்மேயர் மால் சொர்ணபாண்டியன், சுகந்தி, சேகர் சபை மன்ற செயலாளர் – செல்வின் ஜோஸ்வா
சாத்தான்குளம் தாவீது சுந்தரானந்தனார் சபை மன்றம் செயற்குழு உறுப்பினர்கள் – குணசீலன் தங்கதுரை, சுபாஸ், பெர்சி சுந்தர், ஸ்டீபன் சபை மன்ற செயலாளர் – இன்பராஜ்
மெஞ்ஞானபுரம் ஜான் தாமஸ் சபை மன்றம் செயற்குழு உறுப்பினர்கள் – எட்வர்ட், அருள்ராஜா, கரோலின், எமர்சன் சபை மன்ற செயலாளர் – கிறிஸ்டியன் தங்கதுரை
இதனைத் தவிர, சேகர ஊழியர் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகளாக 30 பேரும், திருமண்டல ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளாக 18 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 2 பிரதிநிதிகள் தவிர மற்ற அனைத்து பதவிகளையும் எஸ்.டி.கே. ராஜன் அணி கைப்பற்றியது. வெற்றி பெற்ற அனைவரும் முன்னாள் லே செயலாளர் எஸ்.டி.கே. ராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.கே. ராஜன், “இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், இரண்டு அணிகள் போட்டியிடும்போது ஒரு அணி 40 சதவீதமும், மற்றொரு அணி 60 சதவீதமும் வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை முதன்முறையாக 100 சதவீதம் எங்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரணி நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியும், ஊழல் குற்றச்சாட்டுகளும் இந்த வெற்றிக்கு காரணம்,” என தெரிவித்தார்.
மேலும், “புதிய கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்களிப்பவர் அல்ல; வாக்களிப்பது டயோசிசன் மக்கள் தான். அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்,” என்றும் கூறினார்.
வரும் 30, 31 தேதிகளில் நாசரேத்தில் நடைபெறும் திருமண்டல பெருமன்றக் கூட்டத்தில், லே செயலாளர், துணைத் தலைவர், குருத்துவ செயலர், திருமண்டல பொருளாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் எங்கள் அணி வெற்றி பெறும் என எஸ்.டி.கே. ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், இரா. ஹென்றி, மோகன்ராஜ் அருமைநாயகம் உள்ளிட்ட திருமண்டல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி–நாசரேத் திருமண்டல டயோசிசன் நிர்வாகத் தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி 100% வெற்றி – முன்னாள் லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் பேட்டி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
136 கோடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: தூத்துக்குடி மக்களுக்கு அநீதி – பாஜக கடும் கண்டனம்!!
அடுத்த
ஒன்றிய அரசை விட கூடுதலாக 300 கோடி ஒதுக்கீடு: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு உயர தமிழக அரசின் தொடர் முயற்சி – அமைச்சர் கீதாஜீவன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026