தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.136.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாக மட்டும் மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2047ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலக்கை நிறைவேற்றும் வகையில், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய விமான நிலையம், துறைமுக விரிவாக்கம், கப்பல் கட்டும் தளம், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இதய அறுவைசிகிச்சை, புற்றுநோய், சிறுநீரக நோய், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு உயிர்காக்கும் சிகிச்சைகள் தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசின் பெரும்நிதி பங்களிப்புடன் ரூ.136.35 கோடி மதிப்பீட்டில் இந்த பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக சித்ராங்கன் தெரிவித்தார். 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே மாற்றி, மகப்பேறு மருத்துவமனையாக மட்டும் மாற்றுவது தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும் என அவர் சாடினார்.
இந்த திடீர் முடிவு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், திராவிட மாடல் அரசின் இந்த நடவடிக்கை மக்கள் நலனுக்கானது அல்ல; மாறாக தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும் உள்நோக்கமுடைய முடிவாகவே தெரிகிறது என்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் டயாலிசிஸ், இருதய அறுவைசிகிச்சை, புற்றுநோய் போன்ற உயர்சிகிச்சைகளுக்காக பல லட்சம் ரூபாய் செலவழித்து வெளியூர் செல்ல வேண்டிய நிலை நீடித்து வருவதாகவும், சிகிச்சை கிடைக்காமல் பல உயிர்கள் பறிபோயுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு பல்நோக்கு மருத்துவமனை திட்டத்தை கொண்டு வந்ததாக கூறினார்.
மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு அதிகமாக இருப்பதால், இந்த திட்டம் வெற்றியடைந்தால் பாஜக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு திட்டத்தை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய அவர், மக்களின் உயிரை பணையம் வைத்து அரசியல் செய்யும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இவ்வாறான நிலையில், இந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கடுமையான சட்டப்போராட்டம் முன்னெடுக்கப்படும் என சித்ராங்கன் எச்சரித்தார்.
தூத்துக்குடி
136 கோடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: தூத்துக்குடி மக்களுக்கு அநீதி – பாஜக கடும் கண்டனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கண்ணா சில்க்ஸ் – சகா கலைக்குழு இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் சிறப்பு கலைவிழா கலை வழி மனித நேயம்… மக்களுடன் கொண்டாடப்பட்ட மகிழ்ச்சி கிறிஸ்துமஸ்!!
அடுத்த
தூத்துக்குடி–நாசரேத் திருமண்டல டயோசிசன் நிர்வாகத் தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி 100% வெற்றி – முன்னாள் லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் பேட்டி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026