தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள நீர் வடிகால் ஓடையை பராமரித்தும், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

அத்திமரப்பட்டி பகுதி பொதுமக்களுடன் இணைந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு முன்னதாக, அமைதியான முறையில், மனு அளிக்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆளும் அரசின் காவல்துறை முதலில் அனுமதி மறுத்தது, பின்னர் காவல்துறையுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்கு தவெக பொறுப்பாளர் உடன் நிர்வாகிகள் சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளரை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், வெற்றித் தலைவர் " தளபதியார் " வழியில், மக்கள் பணியில் மக்களோடு மக்களாய் மக்களுக்காக, தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்பதை, இந்த ஆளும் அரசுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன் என்று தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படத் தெரிவித்தார்.