தூத்துக்குடியில் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் 120 வது நிறுவன தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாம் பாங்க் ஆப் இந்தியா வங்கி 3 வது மைல் கிளை, விவிடி மெயின் ரோடு, அண்ணா நகர் ஆண்டவர் நைட் கிளப் அருகில் உள்ள வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

முகாமினை கிளை மேலாளர் கணேஷ் பிரபாகர், எச்.எம்.எஸ் மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட எச்.எம்.எஸ் திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஷாஜகான் சிறப்பாக செய்திருந்தார். 
முகாமில் எக்கோ, ஈசிஜி, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை இருதய சிகிச்சை நிபுணரின் மருத்துவ ஆலோசனை, நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், நெஞ்சு இறுக்கம், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்டிரால், அடிக்கடி மயக்கம், அடிக்கடி படபடப்பு, உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். சித்தார்த், டாக்டர். ரஞ்சனி ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கினர். 
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில், பாங்க் ஆப் இந்தியா வங்கி உதவி மேலாளர் ஸ்வாகத்குமார், பார்வதி, எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ராதா, மாவட்ட இணை செயலாளர் ஜாஹிர் ஹூசைன், மாவட்ட பொறுப்பாளர் பிரம்மநாயகம், மகளிர் அணி இணை செயலாளர்கள் சந்திரமணி, மாலதி, மாவட்ட மகளிரணி துணை செயலாளர்கள் மரிய நிவ்யா, விஜி நிமல், நவஸ்ரீஅனுஷ், அமுதா செல்வி, பூர்ணிகா அஸ்வினி, மாவட்ட இளைஞரணி ஹர்ஷவர்தன், செந்தில்குமார், சுப்புராஜ், பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டர்.


