பாத்திமாநகர் பங்கில் நடைபெற்ற பெருவிழா திருப்பலி விழா, தூத்துக்குடி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அருட்பணி பிராங்கிளின் (மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர்), அருட்பணி பெஞ்சமின் டிசூசா (சட்ட ஆலோசகர்), பங்குத்தந்தை அருட்பணி யேசுதாசன் பெர்னான்டோ, உதவி பங்குத்தந்தை அருட்பணி வின்சென்ட், முன்னாள் பங்குத்தந்தை அந்தோணி பிச்சை ஆகியோர் இணைந்து பங்கெடுத்தனர்.

மேலும் அமலோற்ப மாதா போதை ஒழிப்பு சங்க செயலாளர் அருட்பணி ஜெயந்தன், செயின்ட் தாமஸ் ஆங்கிலப்பள்ளி முதல்வர் அருட்பணி ஜேசுராஜா, புனித தோமையார் ஆங்கிலப்பள்ளி முதல்வர் அருட்பணி இன்பண்ட், இளையோர் பயிலக இயக்குநர் அருட்பணி சுதர்சன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் அருட்பணி சில்வர் ஸ்டார், அருட்பணி சந்திரா நேவிஸ், அருட்பணி பெனோவா (மண்ணின் மைந்தர் குழு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அதேபோல் அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர்நலக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாத்திமாநகர் பங்கு இறைமக்கள் பெருமளவில் பங்கேற்று திருப்பலியில் இணைந்தனர். ஆன்மிக உற்சாகத்துடன் நடைபெற்ற இப்பெருவிழா இன்று நிறைவு பெற்றது.