தூத்துக்குடி புனித அலாய்சிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அந்தோணி சகாய வசந்தி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை மரிய லூசியாள் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பபிளா தொடக்க ஜெபம் செய்தார்.


விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு, ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். தொடர்ந்து மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், பொங்கல் பண்டிகையின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை எடுத்துரைக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவியர்கள் பொங்கல் பண்டிகையை போற்றும் பாடல்களைப் பாடி விழாவை மேலும் சிறப்பாக்கினர்.


முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவியர்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக நடைபெற்ற இப்போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டு, கரும்புடன் கூடிய பொங்கல் பானை, ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வடிவங்களில் அழகிய கோலங்களை வரைந்து அசத்தினர்.


இப்போட்டிக்கு ஆசிரியைகள் ஜெனிபர், ஜெனோ பியா, சீனி, ஜுடி, மோனிகா, கெயிட்டி, பாஸ்கா பிரியதர்ஷினி, லில்லி, ஹேமா, அனிதெரஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மாணவிகளின் கோலங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கினர்.


பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் வனிதா, ஜெயந்தி, பமேலா, சந்திரி, பானு, மரிட்டா கொரேரா ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். விழா மாணவியர்களிடையே பாரம்பரிய விழுமியங்களை வளர்க்கும் வகையில் உற்சாகமாக நடைபெற்றது.