தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி தலைவர் அருண்குமார் அவர்களின் தாயார் ஸ்ரீமதி அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவுக்கு திமுக சார்பில் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.


இந்நிலையில், திமுக மகளிரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி., தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் அமைந்துள்ள அருண்குமார் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, மறைந்த ஸ்ரீமதி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, குடும்பத்தினரிடம் ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்தார்.


இந்த நிகழ்வின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.