தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. வரவேற்புரையாற்றிய தலைமை ஆசிரியர் கனகரத்தினமணி அவர்கள், மாணவர்கள் போதைப்பொருளிலிருந்து விலகி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தலைமை உரையாற்றிய மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி டாக்டர் வேணுகா அவர்கள், இளைஞர்கள் போதைப்பொருளால் சிக்கிக்கொள்ளாமல் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என விழிப்புணர்வு அளித்தார்.
சிறப்புரையாற்றிய மாவட்ட சுகாதார நேர்முக உதவியாளர் பெரியசாமி அவர்கள், போதைப்பொருள் பழக்கத்தின் உடல் மற்றும் மன நல பாதிப்புகளை எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஜோசப் மற்றும் மாப்பிள்ளையூரனி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் முகமது ஆசிக் அரபி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.
நன்றியுரையாற்றிய தேசிய மாணவர் படை ஆசிரியர் ஜுசஸ் ஆல்பன் அவர்கள், சமூகத்தில் விழிப்புணர்வு பரப்பும் மாணவர்களின் பங்கு முக்கியமானது எனக் கூறினார்.
மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி, நாட்டுப்பண்புடன் நிறைவு பெற்றது.
தூத்துக்குடி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் – மாணவர்களுக்கு ஊக்கமளித்த தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாணவர்களுடன் உற்சாக கலந்துரையாடலில் பங்கேற்ற தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!
அடுத்த
மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேதா சுகாதார முகாம் – மழைக்கால நோய் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026