தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியில் “நமது வணக்கத்திற்குரிய மேயரும் எமது மாணவர்களும்” என்ற தலைப்பில் சிறப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பொறுமையுடனும் பாராட்டத்தக்க வகையிலும் பதிலளித்தார்.
மாணவர்கள் நகர வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி, தூய்மை மற்றும் குடிமைப் பொறுப்பு குறித்து கேள்விகள் எழுப்பினர். மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், நகரின் முன்னேற்ற பணிகள் குறித்து விரிவாக விளக்கி, மாணவர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
மாணவர்களுடன் உற்சாக கலந்துரையாடலில் பங்கேற்ற தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் தொகுதி தன்னூத்து கிராமத்தில் 10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிக்கு அடிக்கல்!
அடுத்த
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் – மாணவர்களுக்கு ஊக்கமளித்த தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026