தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சமூக மேம்பாட்டு திட்டம் (CDP) – TOUCH, உன்னத் பாரத் அபியான் மற்றும் ஆங்கிலத் துறை இணைந்து, (20.09.2025) அன்று இனிகோ நகர் கடற்கரையில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சி காலை 6.00 மணிக்கு தொடங்கி, சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் கடல்சார் உயிரியல் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடையே எடுத்துக்கூறும் நோக்கில் நடைபெற்றது. மாணவிகள் தாமே கடற்கரையை சுத்தப்படுத்தி சமூகத்தில் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சி கல்லூரி செயலாளர் அ.செ. டாக்டர் எஸ். குழந்தை தெரசா, முதல்வர் அ.செ. டாக்டர் ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர் அ.செ. டாக்டர் எம். எஸ். எழிலரசி மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் பி. செரீனா மார்கரெட் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

சமூக மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் எம். ஹெர்மினா மற்றும் திருமதி ஜே. மெல்பா ஷேரன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இந்நிகழ்ச்சி பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றது.