தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவையின் 278-வது “இலக்கியம் பூக்கும் இனிய மாலை” நிகழ்ச்சி ஞாயிறு மாலை காரப்பேட்டை நாடார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கருவூலத்துறை இயக்குநர் பணி நிறைவு செய்த துரை கணேசன் அவர்கள் தலைமை தாங்கினார். செய்யது முகமது ஷரீப் வரவேற்புரை ஆற்றினார்.
நல்லாசிரியர் கா. சாரதா வேணுகோபால் எழுதிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நந்தவனக்குயில்கள் எனும் புதிய நூலின் வெளியீடு நடைபெற்றது. நூலை தமிழ் இலக்கியப் பேரவையின் புரவலர் பழரசம் விநாயகம் மூர்த்தி வெளியிட, தமிழ்ச் செம்மல் நெய்தல் அண்டோ மற்றும் பேரவையின் தலைவர் துரை கணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் இலக்கியச் செம்மல் புலவர் சங்கரலிங்கம், பேராசிரியர் நீதிச்செல்வன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். நெடுஞ்சாலைக் கவிஞர் செல்வராசு பாரதி நினைவுகள் கவிதை வாசித்தார்.
மாவட்ட மைய நூலகர் ஜெ. லதா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவையின் செயலாளர் ஆதி அருமை நாயகம் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர் அல்பர்ட் சுந்தர்சிங், வள்ளிநாயகி, தங்க இருதயம், பூபால் செல்லையா, எல்ஐசி பாலசுந்தர், பாவலர் இளமுருகு, வழக்கறிஞர் வேணுகோபால், ஹரிதாஸ், தொடுவானம் நெல்லை தேவன், சண்முகம், எபனேசர் தபராசு, சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் மற்றும் தமிழ் இலக்கியப் பேரவையின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவையின் 278-வது “இலக்கியம் பூக்கும் இனிய மாலை” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மாணவிகள் முன்னெடுத்த கடற்கரை சுத்தம் – சமூக மேம்பாட்டு திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
அடுத்த
கடல்சார் மாசுபாடு குறித்து தூய மரியன்னை கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026