தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி கே. பழனிசாமி) அவர்கள் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பில்லா விக்னேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர்களின் ஆலோசனையின் பேரில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த விருப்ப மனுவை கழக மகளிர் அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி அவர்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது கழக அமைப்புச் செயலாளர்கள் பி.ஜி. ராஜேந்திரன், சுதா பரமசிவம், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், கழக செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் சொக்கலிங்கம், சகாயராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை, கட்சியினர் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.