திருநெல்வேலியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க வருகை தந்தார். அவரை வரவேற்கும் வகையில் சகா கலை குழுவின் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.


இந்த நிகழ்ச்சிகளில் பறையாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மரக்கால் ஆட்டம், மாடாட்டம் மற்றும் சிலம்பாட்டம் தீ பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை வடிவங்கள் இடம் பெற்றன.


தமிழகத்தின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் மக்கள் கலைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சிகள், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக கலைஞர்களின் ஒத்திசைவு, ஆட்ட நுட்பங்கள் மற்றும் பாரம்பரிய இசை அனைவரையும் கவர்ந்தது.


பொருநை அருங்காட்சியக திறப்பு விழாவை ஒட்டி நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சிகள், தமிழகத்தின் கலாசார பெருமையை நினைவூட்டும் வகையில் அமைந்தது.