தூத்துக்குடி மாநகராட்சியில் இன்று காலை கூட்ட அரங்கில் மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமையில் ஆணையர் மதுபாலன், மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கேள்வி நேரத்தின் போது அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தென்மண்டல இணைச் செயலாளரும், மாநகராட்சி எதிர்கட்சி கொறாடாவும், கவன்சிலரும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனையின் பேரில் பேசும்போது தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் 5ல் வ.உ.சி கல்வியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு தீர்வை அதாவது 5 லட்சம் ரூபாய் வரை தீர்வை ரத்து செய்ய வேண்டி தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்டு உள்ளது. கல்லூரி வளாகத்தில் எவ்வித சுயநதி கல்லூரியும் (self finance) செயல்படவில்லை, என பொய்யான தகவலை மாமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூல் செய்கிறது.
கல்லூரிக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளது. பெட்ரோல் பங்குகள் வைத்துள்ளார்கள். இப்படி பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்டு வரும் வ.உ.சி. கல்லூரி நிர்வாகத்தின் தீர்வை ரத்து செய்யக்கூடாது என்று அதிமுக சார்பில் வலியுறுத்துவதாக கவுன்சிலர் மந்திரமூர்த்தி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது :-

இன்றைய தினம் மாநகராட்சி கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எதிர்கட்சி கொறாடாவாக கலந்து கொண்டேன். அப்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 5 வது தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில் வ.உ.சி. கல்லூரிக்கு டேக்ஸ் (TAX) தீர்வை ரத்து செய்ய வேண்டும். என்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் அபிடபட்டி தாக்கல் செய்யப்பட்டதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டது. கல்லூரி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விபரங்கள் முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.
இதை வண்மையாக கண்டித்து 5 வது தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற கூடாது என்று அதிமுக சார்பில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தோம். தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சி. கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி, அதோடு மட்டுமல்லாது இந்த கல்லூரி அரசாங்க இடத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த கல்லூரி வளாகத்தில் சுயநிதி கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.
ஆனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடபட்டியில் எங்கள் கல்லூரியில் சுயநிதி கல்லூரி செயல்படவில்லை என்று உண்மைக்கு புறம்பாக பொய்யான தகவல்களை தாக்கல் செய்துள்ளார்கள். எல்லோருக்கும் தெரியும் கல்லூரி வளாகத்தில் சுயநிதி கல்லூரி செயல்பட்டு வருகிறது என்று வ.உ.சி. கல்லூரி நிர்வாகம் இலவச கல்வி ஒன்றும் வழங்கவில்லை, கல்விக் கட்டணம் வசூல் செய்து தான் மாணவர்களுக்கு கல்வி பயிற்சிவிக்கப்படுகிறது.
அதோடு சுயநிதி கல்லூரி மூலம் அளவுக்கு அதிகமான கட்டணம் வசூல் செய்து தான் மாணவர்களுக்கு கல்வி பயிற்சிவிக்கப்படுகிறது. அதோடு வ.உ.சி. கல்லூரி நிர்வாகம் பல்வேறு விதிமுறைகளில் செயல்பட்டு வருகிறது. கல்லூரிக்கு என்று வாங்கி இடத்தில் பெட்ரோல் பங்க், நடத்தி வருகிறார்கள். வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டு வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் நடத்தி வருகிறார்கள். இதையெல்லாம் செய்து வரக்கூடிய கல்லூரி நிர்வாகம் இலவசமாக மாணவர்களுக்கு கல்வியை பயிற்சி விக்கிறார்கள் என்ற அடிப்படையில் டேக்ஸ்ஸை தீர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அபிடபட்டி தாக்கல் செய்துள்ளார்கள்.
இதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை அதிமுக சார்பில் வண்மையாக கண்டித்து எங்களது எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம். வ.உ.சி. கல்லூரி நிர்வாகம் விதிமுறைகளில் ஈடுபடாமல் முறையாக மாநகராட்சிக்கு டேக்ஸ்ஸை (தீர்வை) கட்ட வேண்டும். என்பதே எங்களது கோரிக்கை என்று வழக்கறிஞர் மந்திரமூர்த்தி செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.