தூத்துக்குடி அருகே அ. குமரெட்டியாபுரத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில் கொடை விழா கடந்த 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை மாபெரும் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.

இதில் சின்ன மாட்டு வண்டி ஒரு பிரிவாகவும், பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டி இரண்டு பிரிவுகளாகவும் நடைபெற்றது. போட்டியினை சிப்காட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் சின்ன மாட்டுவண்டி போட்டியில் முதல் பரிசான ரூ 30 ஆயிரத்தை மதிமுக முன்னாள் ஒன்றிய தலைவர் வீரபாண்டி. செல்லச்சாமி வழங்கினார். இரண்டாவது பரிசான ரூ 25 ஆயிரத்தை ஒன்றிய திமுக பொருளாளர் மொட்டையசாமி, மற்றும் தெற்கு சிலுக்கன்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.


மூன்றாம் பரிசான ரூ 20 ஆயிரத்தை வடக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கோபி (எ) அழகிரி வழங்கினார். நான்காம் பரிசான ரூ 15 ஆயிரத்தை தெற்குவீரபாண்டியாபுரம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுப்பையா வழங்கினார்.

அதேபோல் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டிக்கான முதல் பரிசான ரூ 25 ஆயிரத்தை தெற்கு வீரபாண்டியாபுரம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பொன்ராஜ் வழங்கினார். இரண்டாம் பரிசான ரூ 20 ஆயிரத்தை அ. குமரெட்டியாபுரம் அருணாச்சலம் வழங்கினார். மூன்றாம் பரிசான ரூ 15 ஆயிரத்தை அ. குமரெட்டியாபுரம் முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சண்முகராஜ் வழங்கினார்.

நான்காம் பரிசான ரூ 10 ஆயிரத்தை பா.ஜ.க ஒன்றிய செயலாளர் முனியசாமி (எ) முனீஸ் வழங்கினார். இதில் சின்னமாட்டு வண்டிப்போட்டியில் மேட்டூர் அழகர்பெருமாள் முதல் பரிசினையும், வேப்பங்குளம் முருகன் & காளியம்மாள் 2 வது பரிசினையும், துவரந்தை மணிமேகலை & எப்போதும்வென்றான் ஆரியாஸ் பேக்கரி 3 வது பரிசினையும், எப்போதும்வென்றான் ராமசுப்பு வீரலட்சுமி 4 வது பரிசினையும் வென்றது.

பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் போட்டியில் முதல் பிரிவில் சங்கரப்பேரி மாரிமுத்துபாண்டியன் & பொன்செல்வி முதல் பரிசினையும், பண்ணையாபுரம் கார்கி & ஆனந்த் 2 வது பரிசினையும், உத்தமபாளையம் ராமர் 3 வது பரிசினையும், மேலபிளாவடி 4 வது பரிசினையும் வென்றது.

அதேபோல் பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் போட்டி 2 வது பிரிவில் சொக்கலிங்கபுரம் கவி ஸ்ரீ மித்ரா முதல் பரிசினையும், எப்போதும் வென்றான் ஆரியாஸ் பேக்கரி 2 வது பரிசினையும், சக்கம்மாள்புரம் பிரியதர்ஷினி 3 வது பரிசினையும், சங்கரப்பேரி எம்.எம். ராஜா பிரதர்ஸ் 4 வது பரிசினையும் வென்றது.

நிகழ்ச்சியில் ராஜேந்திரன், சாமியாடி ராமசாமி, தலையாரி அய்யாவு, கோவில் பூசாரி ஆறுமுகம், தர்மகர்தா தனபால், பட்டுராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி சிறப்பாக செய்திருந்தது.