தூத்துக்குடி கே.டி.சி நகர் எட்டையாபுரம் ரோடு அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் 17 ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண அழைப்பு விழாவானது வைகாசி 10 ம் தேதி (24.05.2025) சனிக்கிழமையான இன்று காலை 8 மணியளவில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கலஸ பூஜை, யாக வேள்வி பூர்ணாகுதி, வஸ்திராகுதி, திரவியாகுதி, ஆகிய பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

பின்னர் 10.35 மணிக்கு மேல் ஆலய மூலஸ்தான விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்று நண்பகல் 11.35 மணியளவில் நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.


அன்னதானத்தை தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.

திரளான பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் அருள் பெற்று சென்றனர். 17 ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண அழைப்பு நிகழ்ச்சியை விழா கமிட்டியாளர்கள் சண்முகையா, ராஜகுமாரசாமி, செல்வராஜ், பெருமாள், ராஜாமணி, சிவசாமி, பால்ராஜ், எம். ராஜன், ரத்தினவேல், சங்கர், சேர்ம பாஸ்கர், வெங்கட் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


அதைத்தொடர்ந்து இன்று மாலை 6:30 மணிக்கு ஊர் அழைப்பு, 7 மணி அளவில் சீர்வரிசை ஊர்வலம், 7.30 மணியளவில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, இரவு 8 மணிக்கு மேல் அருள்மிகு மீனாட்சி அம்பிகா சமேத சொக்கநாத சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் 9.30 மணியளவில் தீபாராதனை நடைபெறும்.