ஸ்டெர்லைட் ஆலையால் தன்னுயிர் நீத்த மன்னுயிர் காத்த நம் முத்து நகரின் தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு இன்று காலை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


பின்னர் கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, காமராஜ் கல்லூரி அருகில், அமெரிக்கன் ஆஸ்பத்திரி ஜங்ஷன், ஸ்டேட் பாங்க் காலனி மெயின் ரோடு, முத்தையாபுரம் ஜங்ஷன், ஆகியப் பகுதிகளிலும், மேலும், திரேஸ்புரம் பகுதி பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, நினைவேந்தல் நிகழ்விலும், பாத்திமா நகர் பகுதியில், பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தினார்.


இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.