மே 22 ம் தேதியான இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 15 சொந்தங்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள தூத்துக்குடி மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணிராஜ் தலைமையில் துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் (சொந்தங்கள்) படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில்  மாநில மகளிர் அணி துணை செயலாளர் சண்முக குமாரி, ஒன்றிய செயலாளர் தேவ பிரியன், அகில் குமார், ராஜ் கபுர், சந்திர சேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வராஜ், எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் திருமலை தங்கம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மருது பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிவராஜ், பகுதி செயலாளர்கள் தாவியது, மாரிமுத்து, சார்பு அணி நிர்வாகிகள் ஏகேவக குமார், ஹரிகரசுதன், உசிலை பால் பாண்டி, கருப்பசாமி, மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள் உட்பட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.