தூத்துக்குடி மாவட்டம், அக்டோபர் 13, 2025 – குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற தசரா திருவிழா, ஒழுங்கும் பாதுகாப்பும் சிறப்பாக காக்கப்பட்ட நிலையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. பக்தர்கள் திரளாக வந்திருந்த நிலையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் விழா சிறப்பாக நடைபெற்றது.
23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 02.10.2025 அன்று சூரசம்காரம் மற்றும் 03.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் நிறைவு பெற்ற இவ்விழாவில், சுமார் 4,000 காவல்துறையினர் பக்தர்கள் பாதுகாப்பில் முழுமையாக ஈடுபட்டனர்.
இவ்விழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் சேவையை பாராட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (13.10.2025) தனிப்பிரிவு, தொழில்நுட்பம், சைபர் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல்துறையினரை நேரில் சந்தித்து வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
காவல்துறையின் ஒற்றுமையும், ஒழுங்குமுறையும், அர்ப்பணிப்பும் காரணமாக தசரா திருவிழா அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு பெற்றது என மாவட்ட மக்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
“சிறந்த சேவைக்கு சிறப்பான பாராட்டு” — குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரத்தை வணங்கும் விழா – வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்துக்கு அழைப்பிதழ் வழங்கல்!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அழைப்பு: அதிமுக 54வது ஆண்டு – நலத்திட்ட உதவிகளுடன் திருநாளாகக் கொண்டாட வேண்டும்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026