தூத்துக்குடி, நெல்லை, மதுரை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அபூர்வமான குளிர் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் குறைந்த நிலையில், நேற்று மாலை முதல் திடீரென அதிக பனி பெய்ததால் பகல் நேரத்திலும் வெப்பநிலை கடுமையாக சரிந்தது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பதிவுகளின்படி, தென் மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி–கொடைக்கானலை மிஞ்சும் இந்த குளிர், தென்தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பதிவான வெப்பநிலைகள் (வரலாற்று சாதனைகள்)
நெல்லை : 22°© – ஒரு நூற்றாண்டில் இல்லாத குறைந்த குளிர்
மதுரை : 22.6°© – 2011 சாதனையை முறியடித்த புதிய பதிவு
கோவில்பட்டி : 21.8°©
தென்காசி : 21°©
தூத்துக்குடி : 20.5°©
திருச்செந்தூர் : 20°©
பாம்பன் : 23°©
கன்னியாகுமரி : 26.6°©
வானிலை மையம் கூறியதாவது:
“மார்கழி, தை மாதங்களிலும் கூட இத்தகைய குறைந்த பகல் வெப்பநிலை தென் மாவட்டங்களில் பதிவானது இல்லை. இன்றைய வெப்பநிலைகள் தென்தமிழக வானிலை வரலாற்றில் முக்கியமான சாதனையாக பதிவு செய்யப்படும்.”
தென்தமிழகத்தின் பல பகுதிகளில் அதிக பனி, அடர்ந்த குளிர் காரணமாக மூடுபனி நிலவும் நிலையில், மாலை நேரங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி
“தென் தமிழகம் நடுங்கியது – 100 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று குளிர் பதிவு”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்.எல்.ஏ தலைமையில் ஜெயந்தி விழா மாட்டு வண்டி பந்தயமும், வணிக வளாக திறப்பும் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
ஸ்டெர்லைட் மூடப்பட்ட தூத்துக்குடியில் குளிர் மாற்றம்: வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மகிழ்ச்சி பதிவு!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026