தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற முழக்கத்துடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் கொடியன்குளம் பாகம் எண்.12, புளியம்பட்டி பாகம் எண்.13 மற்றும் அக்காநாயக்கன்பட்டி பாகம் எண்.14 ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு, கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அனைத்து நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டிய ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், ஒன்றிய மகளீரணி துணை அமைப்பாளர் ராமலெட்சுமி, ஒன்றிய சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் ஆரோக்கிய ராஜ், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன், இளைஞரணி உறுப்பினர்கள் மகேஷ், ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பாக நிலை முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர்.