தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இடம்பெற்று வந்த “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்” என்ற பெயரில் இருந்து, கடந்த ஓராண்டுகளாக “தமிழ்நாடு” என்ற சொல்லை நீக்கி, “அரசு போக்குவரத்துக் கழகம்” என மாற்றப்பட்டு வருவதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி சார்பில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இன்று, “அரசு போக்குவரத்துக் கழகம்” என்று மட்டும் பெயரிடப்பட்டிருந்த அனைத்து அரசுப் பேருந்துகளிலும் “தமிழ்நாடு” என்ற வண்ண ஒட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்த போராட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.மு.தமிழ்நேயன், சு. அன்னலெட்சுமி ஆகியோரின் தலைமையிலும், மண்டல செயலாளர் இ.மாரிமுத்து முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் செ.பரதேசி, அந்தோணி பிச்சை, சதீஷ்குமார், முத்துப்பாண்டி, ராஜேஷ்குமார், கருப்பசாமி, மாரிமுத்து, கோபிநாத், ரஞ்சித், முனியசாமி, மகேஷ், குமரகுரு, ராஜதுரை, ராஜ்குமார், முத்துலிங்கம், செல்வப் பெருமாள், ஆனந்த், அந்தோணி தாமஸ், சோலையப்பன், சுப்புராஜன், பிரகதீஸ்வரன், பழனி, செல்லத்துரை, வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.