உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, உலகின் முதலாவது உள்ளரங்கு பிரான்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் டூர்னமென்ட் தூத்துக்குடி கோமதிபாய் காலாணி உள்விளையாட்டு அரங்கில் மாநில சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தின் முன்னணி சிட்டிங் கிரிக்கெட் வீரர்கள் எட்டு அணிகளாக ஏல முறையில் தேர்வு செய்யப்பட்டு, சம பலத்துடன் புகழ்பெற்ற போட்டியில் மோதினர். உலகில் இதுவே முதல்முறையாக நடைபெறும் இந்த சிறப்பு தொடரை டிரையம்ப் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்தது.
உலக சாதனை சான்றிதழ்களை வீரர்களுக்கு வழங்கிய அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: “விளையாட்டு துறையை பொறுப்பேற்ற நாள் முதலே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் தமிழக வீரர்கள் உலகளவில் சாதனைகள் படைத்து வருகிறார்கள். அரசின் ஊக்கமும், தரமான பயிற்சியும் தான் இவ்வளவு பெரிய சாதனைகளுக்கு காரணம். உங்களுக்குத் தேவையான எந்த உதவியும் வழங்க நான் தயாராக உள்ளேன். தொடர்ந்து பல சாதனைகள் நிகழ வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்றார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை டாக்டர் மகிழ்ஜான் ஒருங்கிணைத்திருந்தார். பல்வேறு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உலக சாதனை! மாற்றுத்திறனாளி சிட்டிங் கிரிக்கெட் வீரர்களை கௌரவித்து பரிசளித்த அமைச்சர் கீதாஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை – எழில் நகரில் கழிவுநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!
அடுத்த
திருநெல்வேலியில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சிறப்பாக நிறைவு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026