தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி பழைய மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையேற்றார். மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா, துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார்.
முகாமில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினர்.
முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் ,
“தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த மனுக்கள் முறையாக பரிசீலித்து, அவற்றின் பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் நேரடியாக பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண்பதற்காக கடந்த 14 மாதங்களாக தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை பெறப்பட்ட மனுக்கள் 794 ஆகும். அவற்றில் 770 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் போன்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படுகிறது.
மாநகராட்சி பகுதி முழுவதும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் நலனுக்காகவே இந்த முகாம்கள் நடைபெறுகின்றன என்பதால் மகிழ்ச்சியடைகின்றனர். ஏற்கனவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமும் நடைபெற்று வருகிறது. அதில் பெறப்பட்ட மனுக்களும் உடனடியாக தீர்வு பெற்றுள்ளன. இம்முகாமில் பெறப்பட்டு தீர்வு செய்யப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு தீர்வாணைகளை மாநகராட்சி பணியாளர்கள் வீடு தேடி கொண்டு சேர்க்கின்றனர். மாநகராட்சி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
ரோச் பூங்கா கடற்கரை சாலை 8 கிலோமீட்டர் தூரம் தூய்மையான நடைபாதையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்த பணிகள் ஒருபுறம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் எதிர் புற சாலையிலும் நிறைவடையும்.
முத்துநகர் கடற்கரையில் உலக தரம் வாய்ந்த நீச்சல்குளம் மற்றும் நீர்சார்ந்த விளையாட்டு பயிற்சிகள் 365 நாட்களும் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டபிள்யூஜிசி சாலையில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நலனும், அவர்களின் ஆரோக்கியமும், மாசு இல்லாத மாநகரமும் உருவாக வேண்டும் என்பதே மாநகராட்சியின் நோக்கம். அதற்கேற்றாற்போல மாநகராட்சி நிர்வாகம் பணியாற்றி வருகிறது. மழைக்காலம் தொடங்கிய நிலையில், ஏ.வி.எம் மருத்துவமனை மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிழக்கு மண்டலத்தில் மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு முறையும் மக்களுக்கு நாம் வைக்கும் முக்கிய வேண்டுகோள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் என்பதாகும். மாநகராட்சி சார்பில் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கேரி பேக் பயன்பாட்டைத் தடுத்து வருகிறோம். தூய்மையான, பசுமையான மாநகரை உருவாக்க அனைவரும் மாநகராட்சி நிர்வாக நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எல்லா பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெறும்,” என்று மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தினார்.
முகாமின் போது பிறப்பு, இறப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 5 பேருக்கு உடனடியாக ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ஜான்சிராணி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரியகீதா, எடின்டா, தனலட்சுமி, ராமு அம்மாள், மும்தாஜ், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அமல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், திமுக வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலகத் தர நீச்சல்குளம் – 365 நாட்களும் நீர்விளையாட்டு பயிற்சி : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குடியிருப்பு பட்டா பாதுகாப்பு விவகாரம் – மாநகராட்சி ஆணையர், மேயரிடம் மனு!!
அடுத்த
செக்காரக்குடியில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றம் – ஆபத்தான இபி போஸ்ட் மாற்றி அமைத்த MLA சண்முகையாவிற்கு நன்றி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026