தூத்துக்குடி மாநகர மக்களுக்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடி ட்ரையல் பிளேசர்ஸ் சார்பில் துணி பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமியை கிளப் நிர்வாகிகள் சந்தித்து துணி பைகள் வழங்கினர். இதையடுத்து மேயர், மாநகர மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணி பைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் துணை மேயர் ஜெனிட்டா, கிளப் தலைவர் ஆயிஷா பிரவீன், பட்டயத் தலைவர் மருத்துவர் புளோரா, திட்டமிடல் குழு தலைவர் வழக்கறிஞர் சொர்ணலதா, ரோட்டரி மாவட்ட ஆளுநர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, தூத்துக்குடி நகரத்தை பிளாஸ்டிக் மாசில்லா நகரமாக மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் – ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடி ட்ரையல் பிளேசர்ஸ் சார்பில் மாநகர மக்களுக்கு துணி பைகள் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் தாளமுத்து நகரில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026