தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சி பகுதிகளில் — மாதாநகர், பாலதண்டாயுத நகர், மேல அழகாபுரி, கீழ அழகாபுரி, தாளமுத்து நகர், ஜாகிர் உசேன் நகர், கீதா ஜீவன் நகர் மற்றும் ராஜபாளையம் — மக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் தாளமுத்து நகர் R.C. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான பெயர் திருத்த ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டாச்சியர்கள் திரு. திருமேனி ஸ்டாலின், முருகேஸ்வரி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் தாளமுத்து நகரில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் – ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடி ட்ரையல் பிளேசர்ஸ் சார்பில் மாநகர மக்களுக்கு துணி பைகள் வழங்கல்!!
அடுத்த
தூத்துக்குடி எஸ்.கே.எஸ்.ஆர் காலனியில் புதிய விளையாட்டுத் திடலுடன் கூடிய பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026