தூத்துக்குடி மாநகராட்சி 8 வது வார்டுக்குட்பட்ட கழகத் தோழர் அமலன் என்பவரது படகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதாகி கடலில் மூழ்கி முழுவதுமாக சேதமடைந்தது.

படகில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர். ஆனால் படகு முழுவதுமாக சேதம் அடைந்தது. சேதமடைந்த படகையும், படகில் பயணம் செய்து கரை திரும்பியவர்களையும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் M.Sc,.B.Ed, (23.07.2025) அன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில் அப்பகுதி கழகத் தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க திரேஸ்புரம் வடபாகம் நாட்டுப் படகு மீனவர் பொது பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேரில் சந்தித்து நிதி உதவியை வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.