சுதந்திரப் போராட்ட வீரர் ஆங்கிலேய ஏகாபத்தியத்திற்கு எதிராக சுதேசி கப்பலோட்டிய தமிழன் மண்ணின் மைந்தர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க,

தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரிவு, அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டாக்டர். டைகர் சிவா, முன்னாள் மேயர் சேவியர் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.