இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் மாவீரராக போற்றப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான மாண்புமிகு கீதாஜீவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், சுரேஷ், மாநகர கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, ராஜேந்திரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மதிமுக மாநகர செயலாளர் முருக பூபதி, மாநில தீர்மானக் குழு உறுப்பினர் பேச்சிராஜ், மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் யோகராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், எம்எல்எப் தொழிற்சங்க மாநில பொருளாளர் அனல் செல்வராஜ், துணை செயலாளர் முருகேசன், திமுக வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், துரை உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாவீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும், தேசப்பற்றும் இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருப்பதாக அமைச்சரும், கட்சி நிர்வாகிகளும் தெரிவித்தனர்.