தூத்துக்குடி மாவட்ட அதிமுக வர்த்தக அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது. இவ்விழா முன்னாள் அமைச்சரும், அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கேக் வெட்டி அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் சி.த. செல்லப்பாண்டியன். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் அறுசுவை கொண்ட மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், கிறிஸ்துமஸ் பண்டிகை அன்பு, சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் அமைதியை வலியுறுத்தும் திருநாள் என குறிப்பிட்டார். அனைத்து மதங்களையும் மதித்து, சமூக ஒற்றுமையை வளர்க்கும் பணியில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கிறிஸ்துமஸ் விழாவில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக வர்த்தக அணி நிர்வாகிகள், அதிமுக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.