தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த மாதம் 20, 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த நேர்காணல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசின் புதிய வயது வரம்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் கிடைத்துள்ளதால், அவற்றின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

மீண்டும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்ட பின், பணி நியமனம் தொடர்பான அடுத்தடுத்த நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்