புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரி செல்வம் அவர்கள் அறிக்கையில்  (01.08.2025) அன்று தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் அவர்களிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது :-

முத்தையாபுரம் பல்க் ஜங்ஷனில் இருந்து துறைமுகம் செல்லும் ரோட்டில் இரு புறங்களிலும் தினசரி மற்றும் வார சந்தையாக ஞாயிற்றுக்கிழமைகளில் பன்றி இறைச்சி வியாபாரக் கடைகள் மாட்டு இறைச்சி வியாபார கடைகள் கோழி இறைச்சி வியாபார கடைகள் பழக் கடை நான்கு சக்கர வாகனங்களில் பலசரக்கு சாமான்கள் விற்பனை செய்தல் சிமெண்ட் தொட்டி வியாபார கடை பழைய இரும்பு வியாபார கடை உர வியாபார கடை பழைய துணிகள் வியாபார கடை பலசரக்கு வியாபாரம் கடைகள் காலை இரவு டிபன் மற்றும் ஹோட்டல் கடைகள் டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளும் நான்கு சக்கர வாகனங்களுக்கு டயருக்கு பஞ்சர் பார்க்கும் வாகனங்கள் வெல்டிங் தொழில் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை வியாபாரிகள் பார்ப்பதால் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களும் சைக்கிளில் வருபவர்களும் ரோட்டின் மேல் வாகனத்தை வண்டிகளை நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்வதால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கு செல்லும் மக்களுக்கும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவியர்களுக்கும் பெரிதும் சிரமமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்திருக்கிறார்கள். சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனை சென்று வந்திருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் விதமாக இருக்கக்கூடிய கடைகளை அப்புறப்படுத்தியும் சுகாதாரக் கேடு உருவாகி பல கொடிய நோய்களை உருவாக்கக்கூடிய கடைகளை அப்புறப்படுத்தியும் பொது மக்களை நோயில் இருந்தும் விபத்துகளில் இருந்தும் காப்பாற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவ வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு மக்களை ஒன்று திரட்டி புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் இன்னும் ஒரு வாரத்திற்குள் கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் போராட்டம் நடைபெறும் என்பதை அரசின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம். என்று புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.