தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள தருவைகுளம் வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய வருடாந்திர திருவிழா, சனிக்கிழமை மாலை கொடியேற்றத் திருநிகழ்வுடன் ஆனந்த கோலாகலமாக தொடங்கியது.
இந்த சிறப்பு நிகழ்வில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பேரருள் தந்தை டோமினிக் அவர்களின் தலைமையில், மேதகு மேனாள் ஆயர் ஜீடு பால்ராஜ் (பாளை மறை மாவட்டம்) அவர்கள் திருக்கொடியேற்றி விழாவை சிறப்பித்தார். மேலும் அருட்தந்தை ராபின் (பாளை மறை மாவட்டம்), அருட்தந்தை சந்தீஸ்டன் (புதியம்புத்தூர் பங்குத்தந்தை) ஆகியோர் திருப்பலியில் கலந்து கொண்டு ஆசீர்வதித்தனர்.
திருவிழா காலத்தில் தினமும் காலை திருப்பவணி மற்றும் திருப்பலி, மாலை ஜெபமாலை மற்றும் ஆராதனை நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்ச்சிகள்:
நற்கருணை பவனி : 27.09.2025, சனிக்கிழமை, 8ஆம் திருவிழா மாலை.
பேரருட்தந்தை சகாய ஜோசப் தலைமையில் நடைபெறும்.
ஆன்மீக குரு சிறுமலர் குறும்படம் வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி அருட்தந்தை அந்தோணி பாக்கியம் (அருப்புக்கோட்டை) மறை உரையாற்றுகிறார்.
அருட்தந்தை பிரடின் (பொருளாளர், அமலகம், மதுரை) முன்னிலை வகிக்கிறார்.
பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை : 28.09.2025, ஞாயிறு, 9ஆம் திருவிழா.
மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி (தூத்துக்குடி மறை மாவட்டம்) தலைமையில் மறை உரை.
அருட்தந்தை தீபக்சிங் (ரொசேரியன் துறவற சபை, பெங்களூரு) மற்றும் அருட்தந்தை விஷால் (உதவி பங்குத்தந்தை, மணப்பாக்கம்) முன்னிலை வகிக்கின்றனர்.
தேர் பவனி : 29.09.2025, திங்கள், 10ஆம் திருவிழா.
அதிகாலை 4 மணிக்கு தேரடி திருப்பலி, அருட்தந்தை மரிய அரசு (எம். சவேரியார்புரம் பங்குத்தந்தை) தலைமையில்.
அருட்தந்தை ஞானப்பிரகாசம் (பல்லடம் பங்குத்தந்தை) மறை உரையாற்றுகிறார்.
தொடர்ந்து தேர் பவனி நடைபெறும்.
திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை எஸ். வின்சென்ட் அடிகளார், உதவி பங்குத்தந்தை விவேக், கட்டளைகாரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இறை மக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
தூத்துக்குடி
தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆனந்த கோலாகலமாக துவக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தருவைகுளம் வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றம் கோலாகலம் : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!!
அடுத்த
அமரர் கே.வி.கே.சாமி 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா ஆரோக்கியபுரத்தில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026