தூத்துக்குடி செல்சினி காலணி 3வது தெரு பகுதியில் மனிதம் ஒன்றே அறக்கட்டளை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, பிவெல் மருத்துவமனை, மற்றும் நெல்லை கேன்சர் கேர் மருத்துவமனை ஆகியவற்றின் இணைப்பில், செல்சினி காலனி ட்விங்கிள் மெட்ரிக் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனர் பிரபாகர் தலைமையில், வள்ளியம்மாள், சரவணசெல்வி, சக்திகணேஷ், பிரவின் உள்ளிட்டோர் இணைந்து முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். முகாமில் மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், பேராசிரியர் சுயம்புலிங்கம், மற்றும் சிவபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ சேவையை பாராட்டினர். முகாமில் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், சக்கரை நோய், புற்றுநோய் ஆகிய பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மனிதநேயத்தை மையமாகக் கொண்டு சமூக நலத்திற்காக செயல்படும் மனிதம் ஒன்றே அறக்கட்டளை மேற்கொண்ட இந்த முயற்சி, உள்ளூர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தூத்துக்குடி
மனிதநேயத்தின் முகமாக — செல்சினி காலணியில் இலவச மருத்துவ முகாம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சந்திப்புகள் பளபளக்கும் புதிய ஒளியில் — நகரின் அழகை கூட்டும் உயர் மின் விளக்கு கோபுரங்கள்!!
அடுத்த
தூத்துக்குடி கே.சி.காலனியில் புதிய பேவர் பிளாக் சாலை – வளர்ச்சி பணிகள் வேகமாக!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026