தூத்துக்குடி மாநகரின் அடையாளமாகவும், தமிழ்நாட்டில் திருத்தந்தையால் அங்கிகரிக்கப்பட்ட 10 பேராலயங்களுள் ஒன்றாகவும் திகழும் பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 443 ம் ஆண்டுப் பெருவிழாவானது ஜூலை 26 சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 05 செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது.
ஜூலை 26ம் தேதி தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை அவர்கள் கொடியேற்றி இவ்விழாவினைத் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இத்தொடக்கக் கொடியேற்ற விழாவில் ஆயர்கள், குருக்கள், இறைமக்களோடு இணைந்து அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
பெருவிழாவின்போது. ஆகஸ்டு மாதம் 3 ம் தேதி ஞாயிறு அன்று காலை தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் குழந்தைகளுக்கான புதநன்மைத் திருப்பலி நடைபெறவுள்ளது. அன்று மாலையில் பேராலய வளாகத்தில் திரளான இறைமக்கள் பங்கேற்கும் திவ்விய நற்கருணைப் பவனியும் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டுப் பெருவிழாவின் சிறப்பம்சமாக, ஆகஸ்டு மாதம் 4ம் தேதி திங்கள் கிழமை மாலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்படும் திருவிழாவிற்கான சிறப்புத் திருப்பலியை ஐதராபாத் உயர்மறைமாவட்டப் பேராயரும் கர்தினாலுமான மேன்மைமிகு அந்தோனி பூலா ஆண்டகை அவர்கள் தலைமையேற்று நடத்த இருக்கின்றார்கள். தொடர்ந்து அன்று மாலையில் தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் மாலை ஆராதனையும் நடைபெறவுள்ளது.
பெருவிழா கூட்டுத் திருப்பலி ஆகஸ்ட் 5 ம் தேதி செவ்வாய்க்கிழமை மேதகு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை அவர்களாலும் உபகாரிகளுக்கானத் திருப்பலி மேனாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை அவர்களாலும் சிறப்பிக்கப்படும்.
அன்னையின் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேராலய அதிபர், பங்குத்தந்தை அருள்பணி. ஸ்டார்வின், துணைப் பங்குத்தந்தை அருள்பணி. பிரவீன் ராசு, களப்பணியாளர் சகோ. மிக்கேல் அருள்ராஜ் மற்றும் அடைக்கல அன்னை, அமலவை அருள்சகோதரிகள், சவேரியானா இயேசு சபையினர், லசால் அருள்சகோதரர்கள், பேராலய மேய்ப்புப் பணிக்குழுவினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர். என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பேட்டியின் போது உதவி பங்குதந்தை அருள்பணி பிரவீன் ராசு, துணை தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், துணை செயலாளர் பெனாட், பொருளாளர் ஜோ சோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகரின் பனிமய மாதா பேராலயத்தின் 443 ம் ஆண்டு பெருவிழாவானது ஜூலை 26 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது - பங்குதந்தை ஸ்டார்வின் பேட்டி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெருந்தலைவர் காமராஜர் குறித்தும் நாடார் இன மக்கள் குறித்தும் இழிவாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடத்தில் நாடார் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு!!
அடுத்த
தூத்துக்குடிக்கு இந்த மாதம் இறுதியில் வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் கருப்பு கொடி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026