தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் தங்கமணி நகர் பகுதியைச் சேர்ந்த பகவதிநாதன் என்ற குடியிருப்பாளர், கடந்த ஆறு வருடங்களாக இல்லாத குடிநீர் இணைப்புக்கே 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை வசூலிக்க முற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.
பகவதிநாதனின் வீட்டில் ஒரே ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே இருந்தும், 2019 முதல் 2025 வரை இரண்டு இணைப்புகள் உள்ளதாக பதிவிட்டு, அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என மாநகராட்சி வாழ்வு ஆபரேட்டர்கள் நேரடியாக வீட்டுக்கு வந்து தெரிவித்து, இணைப்பை துண்டிக்க முயன்றதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த பகவதிநாதன், “எனக்கு ஒரு குடிநீர் இணைப்பு தான் உள்ளது; பயன்படுத்தியதற்கான பணத்தையும் சரியாக செலுத்திவிட்டேன். இல்லாத இணைப்புக்காக 25,000 ரூபாய் எப்படி செலுத்துவது?” என்று அதிகாரிகளிடம் வினவியதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரை அவர் புதன்கிழமை நடைபெற்ற தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகனிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன், “உங்களின் மனு குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். உண்மை நிலை ஆய்வின் அடிப்படையில் விரைவில் தீர்வு வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ‘இல்லாத இணைப்புக்கு’ இலக்கு வரி? – 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் குடிமக்கள் அதிருப்தி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெம்பூரில் புதிய வளர்ச்சி பணிகள் தொடக்கம் — MLA G.V. மார்கண்டேயன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது!!
அடுத்த
மேயர் ஜெகன் தலையீடு: இல்லாத குடிநீர் இணைப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் – குடிமகனின் மனுவுக்கு உடனடி விசாரணை உத்தரவு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026