சமத்துவ மக்கள் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அற்புதராஜ் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெற்கு காவல்நிலையத்தில் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் நாடார் (எ) ரமேஷ் குமார் நாடார் மனு அளித்தார்.



அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு நாடார் சங்கம் என்ற அமைப்பின் மாநில தலைவராக உள்ளேன். நான் சார்ந்துள்ள சுமார் 1.1/2 கோடி நாடார் சமுதாய முன்னேற்றத்திற்காகவும், பொதுமக்களுக்கும் சேவை செய்து வருகிறேன்.

இந்த நிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எனக்கு வழங்கியுள்ள உரிமைகளின்படி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன் .

அப்போது, நான் சார்ந்துள்ள எனது நாடார் குல மக்கள் செய்து வரும் பனைத் தொழிலை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், பனையிலிருந்து கிடைக்கும் பனைப் பொருட்களின் அவசியத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும், உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தையும், பனையிலிருந்து கிடைக்கக் கூடிய அனைத்தும் உணவு பொருட்களே என்பதை வலியுறுத்தியும் நடைபெறுகின்ற கூட்டங்களில் கலந்து கொண்டேன் என்பதற்காக மேற்கண்ட எதிர்மனுதாரரான அற்புதராஜ் காழ்ப்புணர்ச்சிக் கொண்டு என்மீது பல்வேறு வீண் வதந்திகளையும், வீண் பழிகளையும், அவதூறுகளையும் தொடர்ந்து பரப்பி வருகிறார்.

எர்ணாவூர் நாராயணன் என்பவர் பனை மர தொழிலாளர்கள் நல வாரிய தலைவராக இருந்தாலும், பனை தொழிலாளர்களுக்கு அவர்களால் எந்தவித பயனும் இல்லாத நிலையில் நான் பனைத் தொழிலாளர்கள் மத்தியில் நற்பெயர் பெற்று வந்ததை பொருத்துக்கொள்ள முடியாத எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பணிபுரிகின்ற அற்புதராஜ் என்பவர் என்னை தமிழ்நாடு நாடார் சங்கத்தின் மாநில தலைவர் என்றும் பாராமல் சில நயவஞ்சகர்களுடன் கூட்டு சேர்ந்து பேஸ்புக்கில் (17.06.2025)ம் தேதியில் என்னை ஓநாய் என்றும், விபச்சார புரோக்கர் என்றும் தகாத கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் (17.06.2025)ல் காலை 11 மணிக்கு 7200268888 என்ற எனது செல்போனுக்கு, அற்புதராஜின் செல்நம்பர் 9042385363 போன் செய்து, "ஏலே, என்று தகாத வார்த்தைகளை பயன்படுத்தி எனது மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு ஏற்கனவே கொலை வழக்கு முன்பு இருந்துள்ளது. உனக்கு தெரியுமால, நாங்க உன்னை கொன்று புதைத்து தொலைத்துக் கட்டி விடுவோம். நீ தமிழ்நாட்டை விட்டு ஒடிவிடு, தமிழ்நாடு நாடார் சங்கத்தை கலைத்து விடு," என கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

ஆகவே, தாங்கள் சமூகம் எனது மனுவை ஏற்று, என்மீது திட்டமிட்டு பேஸ்புக்கில் அவதூறுகள் பரப்பி, அதன் மூலம் எனக்கு சமுதாயத்தில் இருந்த நற்பெயரை கெடுத்து, என்னை தகாத கெட்ட வார்த்தைகளால் திட்டியும், என்னை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்ற அற்புதராஜ் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். என்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.


மனுவின் போது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல் ராஜ் உட்பட நாம் தமிழர் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.