தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைப்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.


ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டநத்தம் இந்து ராமானுஜர் தொடக்கப்பள்ளி, புதியம்புத்தூர் RC. நடுநிலைப்பள்ளி மற்றும் இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, இளைஞரணி தங்கதுரை, நெசவாளர் அணி செல்வம், வர்த்தக அணி காளியப்பன், ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சிறப்பு முகாமில் பங்கேற்று, பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.