ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பரிவில்லிகோட்டை, ஓணமாகுளம்,மலைப்பட்டி, இளவேலங்கால் மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மாலை நேரங்களில் தங்கள் கிராமத்திலிருந்து கடம்பூர் மற்றும் கோவில்பட்டி செல்வதற்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி. சண்முகையாவிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்எல்ஏ வின் தொடர் முயற்சியின் பலனாக (86C) கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் ஓனமாகுளம் வழியாக கள்ளத்திக்கிணறு மலைப்பட்டி வரை காலை மட்டும் வந்து செல்லும் பேருந்து தினசரி மாலை வேலையும் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
இன்றைய தினம் மலைப்பட்டி மற்றும் கள்ளத்திக்கிணறு கிராமத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மாலை நேர பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார். இந்த மாலை நேர பேருந்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பயனடைவார்கள். மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றி தந்த சண்முகையா எம்எல்ஏவிற்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மண்டல மேலாளர் ரமேசன்
கிளை மேலாளர் ஜெகநாதன்
தொமுச செயலாளர் மாரிமுத்து பொருளாளர் ராஜ்மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
