இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254 வது நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு திமுக ஆதிதிராவிட அணி சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.