தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சி குமரன்நகர், வஉசி நகர், பூப்பாண்டியபுரம் ,மேற்கு காமராஜர் நகர், சகாயமாதா பட்டினம், ஆ. சண்முகாபுரம்  மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொது விநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் மகாராஜா மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி ஒன்றிய துணை செயலாளர் கணேசன் முன்னாள் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன் முன்னாள் வார்டு உறுப்பினர் பாரதிராஜா கிளை செயலாளர் முருகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.